செய்திகள்
பிரதமர் மோடி அளித்த பரிசு பொருள்கள்

கமலா ஹாரிஸ், ஸ்காட் மாரிசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பரிசுகள்

Published On 2021-09-24 18:35 GMT   |   Update On 2021-09-24 18:35 GMT
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் மாநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனித்துவம் வாய்ந்த அன்பளிப்புகளை வழங்கினார்.
வாஷிங்டன்:

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் இன்று நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சென்றடைந்த அவர் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். அதற்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப் பேசினார்.



இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் மாநாட்டு தலைவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த பரிசுகளை வழங்கினார்.

அவற்றில், கமலா ஹாரிசின் தாத்தாவான பி.வி.கோபாலன் உடன் தொடர்புடைய மரத்தினால் உருவான கைவினைப் பொருள் ஒன்றை வழங்கினார். கோபாலன் மூத்த அரசு அதிகாரி ஆவார்.  அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இதேபோல், கமலா ஹாரிசுக்கு குலாபி மீனாகரி செஸ் விளையாட்டுக்கான அன்பளிப்பு ஒன்றையும் பிரதமர் மோடி வழங்கினார். இந்த செஸ் பெட்டி உலகின் மிக பழமையான காசி நகருடன் நெருங்கிய தொடர்புடையது. பிரதமர் மோடியின் தொகுதியைச் சேர்ந்தது ஆகும்.

இந்த செஸ் விளையாட்டுக்கான பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளும் (செஸ் காய்கள்) கைவினைப் பொருட்கள் வகையை சேர்ந்தது.  அவற்றின் வண்ணங்கள் காசி நகரின் பெருமையை பிரதிபலிப்பவை.

இதேபோன்று, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு வெள்ளியால் ஆன குலாபி மீனாகரி கப்பல் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார்.  இந்த பரிசு பொருளும் தனித்துவம் வாய்ந்த கைவினை பொருள் ஆகும்.  இதன் வண்ணங்களும் காசி நகரின் பன்முக தன்மையை பிரதிபலிப்பவை ஆகும்.

ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு சந்தனத்தில் உருவான புத்தர் சிலை ஒன்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

Tags:    

Similar News