தொழில்நுட்பம்
அமேசான்

பல லட்சம் கோடி முதலீடு - வான்வெளி பிராட்பேண்ட் சேவையை துவங்கும் அமேசான்?

Published On 2021-06-03 04:29 GMT   |   Update On 2021-06-03 04:29 GMT
அமேசான் நிறுவனம் துவங்க இருக்கும் புது சேவை இந்தியாவில் பிராட்பேண்ட் கட்டணத்தை குறைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வான்வெளியில் இருந்தபட் இணைய சேவையை அதிவேகமாக வழங்க முடியும். 

ஏற்கனவே எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் குழுமத்தின் ஒன் வெப் போன்ற நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை மூலம் தற்போதுள்ள இணைய கட்டணங்களை பெருமளவு குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 



புதுவித இணைய சேவையை வழங்க அரசிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி, செயற்கைக் கோள் பேண்ட்வித் பயன்பாட்டு கட்டணம், இதர உரிமைகள் குறித்து அரசாங்கத்துடன் விவாதிக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தொலைதொடர்பு துறை மற்றும் வான்வெளி துறை அதிகாரிகளுடன் அமேசான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அமேசானின் பிராஜக்ட் குயிபெர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவை துவங்கப்படும். 

பிராஜக்ட் குயிபெர் திட்டத்தில் அமேசான் 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7,31,32,10,00,000) முதலீடு செய்கிறது. இதை கொண்டு பூமி சுற்றுப்பாதையின் குறைந்த உயரத்தில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. எனினும், இதுகுறித்து அமேசான் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News