செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Published On 2021-03-20 04:58 GMT   |   Update On 2021-03-20 04:58 GMT
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (21-ந் தேதி) தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நாளை (21-ந் தேதி) வருகை தந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

நாளை மாலை 5.30 மணிக்கு ஊத்தங்கரையிலும், 6.45 மணிக்கு பர்கூரிலும், இரவு 8 மணிக்கு கிருஷ்ணகிரியிலும், 9 மணிக்கு சூளகிரியிலும் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து இரவு ஓசூரில் தங்குகிறார். மறுநாள் (22-ந் தேதி) காலை 9 மணிக்கு ஓசூரில் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரியில் முதல்வர் பேச உள்ள 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீசார் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் தேர்தல் பணிகள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி-க்கள் அன்பு, ராஜி, டிஏஸ்பிக்கள் கிருஷ்ணகிரி சரவணன், பர்கூர் தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனிபிரிவு அன்புமணி, டவுன் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News