செய்திகள்
கோப்புபடம்

உற்பத்தி அதிகரிப்பால் வெங்காய விதை விலை சரிவு

Published On 2021-11-25 05:42 GMT   |   Update On 2021-11-25 05:42 GMT
பல விவசாயிகள் விதை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டியதால் விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
திருப்பூர்:

கடந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய பயிர்கள் பெருமளவில் அழிந்தன. இதனால் விதைக்கு தட்டுப்பாடு நிலவியது. வெங்காய விலையும் உச்சத்தில் இருந்தது. நாற்று விட்டு நடவு செய்யும் உயர் ரக வெங்காயத்தை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய தொடங்கினர்.

பல விவசாயிகள் விதை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டியதால் விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வெங்காய விதை விற்பனை விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ ரூ.12 ஆயிரம் வரை விலை போனது. 

எனவே விதை வாங்க முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த ஆண்டு விதைக்கு கிராக்கி நிலவியதால் இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் விதை உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

வெங்காய விதை முன்கூட்டியே உற்பத்தி செய்ததால் அதிக அளவில் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு வெங்காய விலை சரிவு கண்டதால் விவசாயிகளிடம் வெங்காயம் நடவு செய்யும் ஆர்வம் குறைந்துள்ளது. மழைக்காலம் முடிந்த பின் நாற்று விட விவசாயிகள் தொடங்குவர்.

மழை தொடர்வதால் வெங்காய விதை விற்பனை சூடு பிடிக்கவில்லை. தற்போது ஒரு கிலோ வெங்காய விதை ரூ. 1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. 
Tags:    

Similar News