உள்ளூர் செய்திகள்
தமிழக அரசு

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

Published On 2021-12-03 01:43 GMT   |   Update On 2021-12-03 01:43 GMT
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் 7.9.2021 அன்று, ‘’சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்’ என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News