செய்திகள்
பட்டாசு

இந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது... டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை விதிப்பு

Published On 2020-11-09 06:10 GMT   |   Update On 2020-11-09 06:10 GMT
டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் வரும் 30ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசு பயன்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையல் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் இன்று நள்ளிரவு முதல் 30ம்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து தேசிய பசுமை  தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

‘காற்று மாசு மிதமான அளவு அல்லது அதற்கு குறைவாக உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். 

மேலும் தீபாவளி, சாத், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது இரண்டு மணி நேரங்களுக்கு மட்டும் பட்டாசுகளை பயன்படுத்துவதற்கும், வெடிப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும், இந்த நேர கட்டுப்பாட்டை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்’ என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.
Tags:    

Similar News