தொழில்நுட்பச் செய்திகள்
ஆண்ட்ராய்டு 13

இனி சிம்கார்டுகளே தேவையில்லை- கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

Published On 2022-04-04 12:06 GMT   |   Update On 2022-04-04 12:06 GMT
ஆண்ட்ராய்டு 13 குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிம்கார்டுகள் குறித்த தகவலை கூகுள் பகிர்ந்துள்ளது.
சிம்கார்டுகள் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தும் வகையில் போன்கள் சந்தையில் உள்ளது. இருப்பினும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

இந்நிலையில் கூகுள் வெளியிடவுள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு MEP (Multiple Enabled Profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்தவுள்ளது. இதற்கான காப்புரிமையை கூகுள் 2020-ம் ஆண்டிலேயே பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு இ.சிம்களை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் சிம்கார்ட் ஸ்லாட்டுகளே இல்லாத பிக்ஸல் போன்களை கூகுள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மினி உள்ளிட்ட போன்களில் இரண்டு இ சிம்கள் அல்லது ஒரு நேனோ சிம் மற்றும் ஒரு இ.சிம் ஆகியவற்றை பயன்படுத்தும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு போன்களில் ஒற்றை இ.சிம் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கூகுளின் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டினால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News