செய்திகள்
சென்னை வந்தடைந்த அமித்ஷா

உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்

Published On 2021-02-27 19:35 GMT   |   Update On 2021-02-27 19:35 GMT
விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. சார்பிலும் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். விழுப்புரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பின், அங்கிருந்து புதுவை மாநிலம் செல்கிறார். அங்கும் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து அமித்ஷா இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News