ஆன்மிகம்
பாளையங்கோட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் முன்பு தீப விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

பாளையங்கோட்டையில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா சிறப்பு பூஜை

Published On 2021-10-09 05:52 GMT   |   Update On 2021-10-09 05:52 GMT
பாளையங்கோட்டையில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா சிறப்பு பூஜை நடைபெற்றது. வருகிற 15-ந்தேதி தசரா திருவிழா நடைபெறுகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய 12 அம்மன் கோவில்களிலும் தசரா விழா கடந்த 5-ந்தேதி காலை 10 மணிக்கு துர்கா பூஜையுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களின் முன்பாக நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர். பாளையங்கோட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் முன்பு பக்தர்கள் தீப விளக்கு ஏற்றி வழிபட்டனர். சில கோவில்களில் பக்தர்கள் அம்மனை தரிசனம் ெசய்ய அனுமதி வழங்கப்பட்டது.

வருகிற 15-ந்தேதி தசரா திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு சப்பரத்தில் அம்மன் எழுந்தருளலும், சிறப்பு பூஜைகளும் நடைெபறுகிறது.

பாளையங்கோட்டை அண்ணாநகர் அதர்வன பத்ரகாளி அம்மன் தசரா குழுவின் சார்பில் காளிபூஜை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், அலங்கார ்தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
Tags:    

Similar News