தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி டீசர்

12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உடன் இணையத்தில் லீக் ஆன ரியல்மி ஜிடி நியோ

Published On 2021-03-30 04:19 GMT   |   Update On 2021-03-30 04:19 GMT
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் உருவாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 சிப்செட் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

கீக்பென்ச் விவரங்களின் படி ரியல்மி ஜிடி நியோ மாடல் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 975 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3320 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.



ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய ரியல்மி ஜிடி நியோ மாடல் துவக்க விலை 2 ஆயிரம் யுவான் இந்திய மதிப்பில் ரூ. 22,200 என துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News