லைஃப்ஸ்டைல்
தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா?

Published On 2020-05-23 04:47 GMT   |   Update On 2020-05-23 04:47 GMT
மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா? என்று கேட்டால் அதற்கு தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம்.

புட்டிப் பாலை விடத் தாய்ப்பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் தாய்மாருக்கு எதுவும் விளங்குதில்லையே! தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது.

இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.  ஆய்வுகளின் படி புட்டிப்பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.
Tags:    

Similar News