செய்திகள்
அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-03-18 13:28 GMT   |   Update On 2021-03-18 13:28 GMT
தென்காசியில் சுகாதார ஆய்வாளர்கள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தென்காசி:

தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜாண் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாச சுந்தரம், மகேஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று தென்காசி நகரில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து அவர்களுக்கு முககவசமும் வழங்கினர். 

மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தென்காசியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News