செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவஸ்தான அதிகாரி

Published On 2021-07-20 10:11 GMT   |   Update On 2021-07-20 13:45 GMT
திருப்பதியில் நேற்று 17,073 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8,488 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:

திருப்பதியின்புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.

அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கண்ணாடி, செம்பு, எவர்சில்வர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் கடை உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது.

இன்னும் 2 மாத காலத்துக்குள் இவை முற்றிலும் அமல்படுத்தப்பட உள்ளன. திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே பக்தர்கள் குடிநீர் தேவைக்காக அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.



திருப்பதியில்ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான ரூ.300 கட்டண டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. திருப்பதியில் நேற்று 17,073 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8,488 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.70 கோடி உண்டியல் வசூலானது.


Tags:    

Similar News