செய்திகள்
கோப்புபடம்

அணைகள் நிரம்பியதால் பி.ஏ.பி., 4-ம் மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி தண்ணீர் விநியோகம்

Published On 2021-09-14 05:18 GMT   |   Update On 2021-09-14 05:18 GMT
பாசனத்திற்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுக்களாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மடத்துக்குளம்:

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

அதன் அடிப்படையில் நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து 3-ந்தேதி ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுக்களாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கால்வாய் பராமரிப்பு பணி தாமதம் காரணமாக 6-ந்தேதி முதல் பாசனத்திற்கு நீர் வழங்கும் பணி தொடங்கியது. 21 நாட்கள் வழங்கப்பட்டு 29-ந் தேதி முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பியதால் தொடர்ந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கப்பட்டு திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டது.

இதனால் இரண்டாம் சுற்றுக்கு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பாசனத்திற்கு 30-ந்தேதி முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

‘பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பியதால் தொடர்ந்து நீர் எடுக்கப்பட்டு  நான்காம் மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.
Tags:    

Similar News