செய்திகள்
பிரதமர் மோடி

போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன்... பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

Published On 2021-01-15 03:52 GMT   |   Update On 2021-01-15 03:52 GMT
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். வலைத்தளங்களில் திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து  தமிழில் பதிவு செய்துள்ளார். அது வருமாறு:-

போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரது லட்சியங்கள்  தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு  மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News