ஆட்டோமொபைல்
டெட்ராயிட் ஆட்டோ விழா

கொரோனா வைரஸ் காரணமாக ரத்தான ஆட்டோ விழா

Published On 2020-03-30 12:14 GMT   |   Update On 2020-03-30 12:14 GMT
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ விழா நடைபெற இருந்த பகுதியை மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ விழா டெட்ராயிட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய மற்றும் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. 



இந்த ஆண்டிற்கான விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதால், 2021 ஜூன் மாத வாக்கில் டெட்ராயிட் ஆட்டோ விழா நடைபெற இருக்கிறது. வழக்கமாக ஜனவரி மாத  வாக்கில் நடத்தப்பட்டு வந்த டெட்ராயிட் ஆட்டோ விழா சமீபத்தில் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. 

முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்விழா ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ விழா நடைபெற இருந்த ஜாவிட்ஸ் கன்வென்ஷன் சென்ட்டர் தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News