செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இந்தியாவில் எடுக்கப்பட்டதாக சோக கதையுடன் வைரலாகும் வீடியோ

Published On 2020-10-14 05:23 GMT   |   Update On 2020-10-14 05:23 GMT
இந்தியாவில் எடுக்கப்பட்டதாக கூறி சோக கதையுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிக்ஷா ஓட்டுனரிடம் இருந்து சைக்கிள் ரிக்ஷாவை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதாக கூறி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோவில் அதிகாரிகள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனரிடம் பங்களா மொழியில் கேள்வி கேட்கும் ஆடியோ பின்னணியில் கேட்கிறது. இதனுடன் பின்னணி இசை சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில் அரசியல் கட்சியினரை டேக் செய்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 



வீடியோவை ஆய்வு செய்ததில் அது வங்கதேச நாட்டின் தாகா எனும் பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பவர் பாஸ்லர் ரகுமான். இவர் சிறிய உணவகம் ஒன்றை இயக்கி வருகிறார். இவரது  ரிக்ஷா வண்டியை உள்ளூர் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிகழ்வு குறித்து தாகா ட்ரிபன் பத்திரிகையில் செய்தியாக வெளியாகி உள்ளது. எனினும், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று கூறுகின்றனர். அந்த வகையில் வைரல் வீடியோ இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News