செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒரே நாளில் 13,567 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-13 12:46 GMT   |   Update On 2021-09-13 12:46 GMT
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம் வாயிலாக மொத்தம் 13,567 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டு 125 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரிடையாக ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாசில்தார் மகேஷ், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பல்வேறு வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் நேற்று முழுவதும் நடைபெற்றாலும், ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம் வாயிலாக மொத்தம் 13,567 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News