செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில்

சென்னை மெட்ரோ ரெயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க அனுமதி

Published On 2020-11-19 14:01 GMT   |   Update On 2020-11-19 14:01 GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் திங்கட்கிழமையில் இருந்து முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் முதல்வகுப்பு பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளில் பயணம் செய்ய சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை விட அதிகமாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில் திங்கட்கிழமையில் இருந்து முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வகுப்பு பெட்டிகள் மகளிர் பயணிப்பதற்கான வகையில் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது. பிரத்யேக பெட்டியாக மாற்றினாலும் சாதாரண கட்டணத்திலேயே பெண்கள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக பெட்டிகள் மூலம் பெண் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்யும் வகையில் அதிக இருக்கைகள் ஏற்படுத்திட முடியும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News