ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று தொடங்குகிறது

Published On 2020-11-16 08:45 GMT   |   Update On 2020-11-16 08:45 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாணிக்க ஸ்ரீபலி விழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாணிக்க ஸ்ரீபலி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் மாணிக்க ஸ்ரீபலி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.

விழாவையொட்டி தினமும் காலை 10 மணிக்கு மேல் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன சாத்து தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு மேல் கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு தீபாராதனை, பஞ்சாட்சர ஜெபயோகம், இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமியை ரிஷப வாகனத்திலும், திருவேங்கட விண்ணவரும், பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக சுசீந்திரம் கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் மாணிக்க ஸ்ரீபலி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

இதேபோல் சுசீந்திரம் அரசடி விநாயகர் கோவில், ஆசிரமம் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா கோவில், சன்னதி தெரு குலசேகர விநாயகர் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களிலும் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற உள்ளன.
Tags:    

Similar News