செய்திகள்
4 விக்கெட் வீழ்த்திய பிராவோ

பொல்லார்டு அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை 21 ரன்னில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2021-07-02 00:23 GMT   |   Update On 2021-07-02 13:51 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 18-வது ஓவரை வீசிய பிராவோ டி காக், ஷம்சி மற்றும் நிகிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
செயின்ட் ஜார்ஜ்:

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இதையடுத்து, 168 ரன்கள் இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 60 ரன்னில் வெளியேறினார். இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
Tags:    

Similar News