இந்தியா
சோதனைச்சாவடி

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு நீக்கம்- தியேட்டர்களை திறக்கவும் அனுமதி

Published On 2022-01-27 12:10 GMT   |   Update On 2022-01-27 12:38 GMT
திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 200 பேர் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் கடைகள் திறக்கும் உத்தரவை அரசு நீக்கி உள்ளது. 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்கவும், 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி சினிமா தியேட்டர்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 200 பேர் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாரஇறுதி ஊரடங்கு கிடையாது என்றும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் கலந்துகொண்ட பேரிடர் மேலாண்மை ஆணைய (டிடிஎம்ஏ) கூட்டத்தில், கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News