செய்திகள்
தொண்டி -திருவாடானை சாலையில் குடிநீர் குழாய்உடைப்பு சீரமைக்கும் பணி நடந்தபோது எடுத்தபடம்.

தொண்டி- திருவாடானை இடையே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்

Published On 2021-07-16 15:13 GMT   |   Update On 2021-07-16 15:13 GMT
தினத்தந்தி செய்தி எதிரொலியாக தொண்டி-திருவாடானை இடையே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொண்டி:

தொண்டி பேரூராட்சி, திருவாடானை அருகே உள்ள பாரூர், கோவணி, ஆட்டூர், சேந்தனி, ஆகிய இடங்களில் இருந்து ஆழ்குழாய் மூலம் செல்லும் குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. தொண்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலையில் இதுபோன்று குழாய் உடைப்புகள் மூலம் வீணாகி வரும் குடிநீரை பாதுகாத்தால் தொண்டி மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் ‘தினத்தந்தி’யில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் எதிரொலியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், தனிஅலுவலர் இளவரசி ஆகியோர் உத்தரவின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் மேற்பார்வையில் தொண்டி-திருவாடானை இடையே குடிநீர் குழாய்கள் உடைப்பு குறித்து பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் குழாய் உடைப்புகளை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் பொக்லைன் எந்திரங்கள், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News