செய்திகள்
டேவிட் வார்னர், சீன் அப்போட்

சிட்னியில் கொரோனா அதிகரிப்பு: மெல்போர்ன் பறந்தனர் வார்னர், சீன் அப்போட்

Published On 2020-12-20 12:49 GMT   |   Update On 2020-12-20 12:49 GMT
சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை காரணமாக டேவிட் வார்னர், சீன் அப்போட் மெல்போர்ன் சென்றுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இருவரும் சிட்னியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகினர். மெல்போர்னில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த நிலையில் சிட்னி அமைந்துள்ள நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் சிட்னியில் இருந்து விக்டோரியா மாநிலம் வரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் எனக்கூறி விக்டோரியா மாநிலம் எல்லையில் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் சிட்னியில் உள்ள வார்னர், அப்போட் உடனடியாக விக்டோரியா மாநிலம் மெல்போர்ன் சென்றனர். இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருவரும் செல்ல இருக்கிறார்கள்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News