செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி.

விழுப்புரம் அருகே லாரி அதிபர் உள்பட 2 வீடுகளில் 22 பவுன் நகை கொள்ளை

Published On 2021-07-24 06:45 GMT   |   Update On 2021-07-24 06:45 GMT
லாரி உரிமையாளர் ரமேஷ் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார்.
மயிலம்:

விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் ஜக்காம்பேட்டை பி.எம்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். போலீஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டு மாடியில் லாரி அதிபர் ரமேஷ் குடியிருந்து வருகிறார்.

நேற்று காலை ஜெகன் தனது மனைவியுடன் கல்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். இதே போல் லாரி உரிமையாளர் ரமேஷ் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். ஜெகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் பணம்- நகை ஆகியவற்றை எடுத்து கொண்டனர். பின்னர் மாடிவீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று இரவு ஜெகன், மற்றும் ரமேஷ் வீடு திரும்பினர். அப்போது ஜெகன் வீட்டில் 2 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்க பணம், லேப்டாப் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. ரமேஷ் வீட்டில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் லேப்டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மயிலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. கணேசன், மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.



Tags:    

Similar News