ஆட்டோமொபைல்
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் அறிமுகம்

Published On 2021-02-02 08:59 GMT   |   Update On 2021-02-02 08:59 GMT
சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மாடலான சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. முன்னதாக இதன் விற்பனை கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.

கிராஸ்ஓவர் டிசைன், பல்வேறு அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் பிரீமியம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் களமிறங்குகிறது. இது 2021 ஜீப் காம்பஸ், போக்ஸ்வேகன் டி ராக் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.



சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இத்துடன் பல்வேறு சிங்கில் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஏர் பியூரிபையர், ஸ்ப்லிட் ஏசி வென்ட் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News