செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

Published On 2021-06-10 00:20 GMT   |   Update On 2021-06-10 00:20 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வடசிறுவலூரை சேர்ந்த 55 வயது நபர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வானூரை சேர்ந்த 30 வயது வாலிபரும், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 52 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற 8 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News