ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் முருகன்

ஆரணியில் முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

Published On 2021-07-07 04:48 GMT   |   Update On 2021-07-07 04:48 GMT
முருகனுக்கு உகந்தநாளான கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் கோவில்களும் மூடப்பட்டிருந்தன. தளர்வுகளை தொடர்ந்து ஏறத்தாழ 50 நாட்களுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்பட்டன.

அன்றைய தினம் மதியத்திற்கு பின்னர் ஆனி மாத கிருத்திகை நட்சத்திரம் வந்தது. நேற்று பிற்பகல் வரை கிருத்திகை நட்சத்திரம் இருந்தது.

முருகனுக்கு உகந்தநாளான கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சின்ன கடை தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், சேவூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News