செய்திகள்
செயற்கைக்கோள்

கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

Published On 2020-09-21 20:59 GMT   |   Update On 2020-09-21 20:59 GMT
ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங்:

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

‘ஹையாங்2சி’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4பி’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த புதிய செயற்கைக் கோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா தனது கப்பல் ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News