செய்திகள்
பரிசோதனைக்கான சாம்பிள்கள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 13 கோடியை தாண்டியது - நேற்று மட்டும் 10.66 லட்சம் சாம்பிள்கள்

Published On 2020-11-21 19:53 GMT   |   Update On 2020-11-21 19:53 GMT
இந்தியாவில் நேற்று மட்டும் 10.66 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 75.44 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். புதிய நோய்த்தொற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது. 

அதேசமயம் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரசுக்கான பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 13 கோடியை தாண்டி உள்ளது. 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 13,06,57,808 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த 10 நாளில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,66,022 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News