செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையம்.

கோயம்பேட்டில் ரூ.4 லட்சம்-70 கிலோ வெள்ளியுடன் 3 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2019-11-06 10:02 GMT   |   Update On 2019-11-06 10:02 GMT
கோயம்பேட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூ.4 லட்சம்-70 கிலோ வெள்ளியுடன் நின்ற 3 வாலிபர்களை பிடித்து அதற்கான உரிய ஆவணங்கள் கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய தலைமை அலுவலகம் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.

ஆட்டோவில் அமர்ந்து இருந்த 3 பேரிடம் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், காவலர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர்.

அவர்கள் வைத்து இருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் ரூ.4 லட்சம் ரொக்கம் 70 கிலோ வெள்ளி கட்டி மற்றும் வெள்ளி கொலுசுகள் இருந்தன. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து ரூ.4 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த சுகுமார், கார்த்திக், மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர்கள் சவுகார்பேட்டை பகுதியில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதை ஆம்னி பஸ் மூலம் சேலம் கொண்டு செல்வதற்காக காத்து நின்றதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News