இது புதுசு
எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்.ஜி. மோட்டார்

Published On 2021-12-10 07:49 GMT   |   Update On 2021-12-10 07:49 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் இது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரை மட்டும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் விலை ரூ. 21 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24.68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'அடுத்த நிதியாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இது சர்வதேச பிளாட்பார்மை சார்ந்து உருவாகும் கிராஸ்-ஓவர் மாடல் ஆகும். இந்த பிளாட்பார்மில் தொடர்ந்து புதிய மாடல்கள் உருவாக்கப்பட இருக்கிறது,' என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
Tags:    

Similar News