செய்திகள்
கோப்பு படம்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு இறந்த நிலையில் பிறந்த பெண் குழந்தை

Published On 2021-05-01 11:27 GMT   |   Update On 2021-05-01 11:27 GMT
14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்தும், குழந்தை இறந்தே பிறந்தது குறித்தும் மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் ஓரப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 25). தொழிலாளியான இவருக்கும், 14 வயதே ஆன உறவினர் மகளுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கர்ப்பிணியான அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவு 12.35 மணியளவில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் அந்த குழந்தை இறந்த நிலையிலேயே இருந்தது. குழந்தை பெற்ற சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர். அரசு குழந்தை திருமணம் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இது போல சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதற்கிடையே 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்தும், குழந்தை இறந்தே பிறந்தது குறித்தும் மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் சிறுமியின் பெற்றோர் மற்றும் கணவர் மீதும் வழக்குபதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News