செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு - சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Published On 2019-11-04 10:37 GMT   |   Update On 2019-11-04 10:39 GMT
டெல்லி காற்று மாசுக்கு காரணமான அரியானா, பஞ்சாப் மாநில அரசின் தலைமை செயலாளர்கள், போலீசார் மற்றும் கிராம தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எச்சரித்தனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தவில்லை என்றால் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகிவிடும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறைகூறாமல் ஒருமித்த கருத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பயிர்க்கழிவு எரிப்புதான் காரணம் என்றால் அரியானா, பஞ்சாப் மாநில அரசின் தலைமை செயலாளர்கள், போலீசார் மற்றும் கிராம தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். 

ஐ.ஐ.டி. நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும். காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகனம் இயக்கப்படுவதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது? என கேள்வி எழுப்பினர்.
Tags:    

Similar News