செய்திகள்
அகல் விளக்கு

தொடர் மழையால் அகல் விளக்கு விற்பனை பாதிப்பு- தொழிலாளர்கள் கவலை

Published On 2021-11-18 09:20 GMT   |   Update On 2021-11-18 09:20 GMT
தொடர் மழை காரணமாக அகல் விளக்குகளை தயாரிப்பது, விற்பனை செய்வது குறைந்து உள்ளதாக தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
திருவள்ளூர்:

கார்த்திகை தீபத் திருநாள் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் ஏராளமான தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர் மழை காரணமாக அகல் விளக்குகளை தயாரிப்பது, விற்பனை செய்வது குறைந்து உள்ளதாக தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து காக்களூரைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி தனசேகரன் கூறியதாவது:-

நாங்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருகிறோம். தற்போது சீசனுக்கு ஏற்றவாறு தயார் செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக எங்களது தொழில் முழுவதும் முடங்கியது. இந்த ஆண்டு மழை வெள்ளம் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போன்றவை விலை அதிகம் உள்ளது.

தொடர் மழை காரணமாக அகல் விளக்கு தயாரிப்பதும், விற்பதும் முடங்கி உள்ளது. அகல் விளக்குகளை விற்பனை செய்தாலும் குறிப்பிட்ட லாபம் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உபகரணங்கள் வழங்க வேண்டும். இங்கு செய்யப்படும் ஒரு விளக்கு ரூ.1 முதல் ரூ.10 வரையிலும் விலை போகிறது. தற்போது அச்சு விளக்குகள் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். இதனால் மண் பானை தொழில் முடங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News