ஆட்டோமொபைல்
லம்போர்கினி உருஸ்

இந்திய வினியோகத்தில் புது மைல்கல் கடந்த லம்போர்கினி கார்

Published On 2021-03-04 08:33 GMT   |   Update On 2021-03-04 08:33 GMT
லம்போர்கினி நிறுவனத்தின் சொகுசு கார் மாடல் இந்தியாவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடல் வினியோகத்தில் 100 யூனிட்களை கடந்து புது மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் உருஸ் மாடலின் முதல் யூனிட் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் லம்போர்கினி வளர்ச்சிக்கு உருஸ் மாடல் பெருமளவு பங்களிப்பை வழங்கி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் லம்போர்கினி உருஸ் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது.



லம்போர்கினி உருஸ் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 305 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். 

“உருஸ் மாடல் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் சிறப்பான இடம் பிடித்துள்ளது. முற்றிலும் புது பிரிவை உருவாக்கியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரிவையும் வளர்ச்சி பாதைக்கு உருஸ் மாடல் கொண்டு சென்று இருக்கிறது. இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையில் 50 சதவீதம் உருஸ் மாடலாக இருக்கிறது.” என லம்போர்கினி இந்தியா தலைவர் ஷரத் அகர்வால் தெரிவித்தார். 
Tags:    

Similar News