செய்திகள்
கைதான உதயகுமாரையும், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் மாநகரில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது-8 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-10-08 06:47 GMT   |   Update On 2021-10-08 06:47 GMT
தனிப்படையினர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் மர்ம ஆசாமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டே இருந்தது.

இதுகுறித்து கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ரவி நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தங்கவேல் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் மர்ம ஆசாமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் இரு சக்கர வாகனங்களை திருடியது  தொடர்பாக திருப்பூர் இடுவம்பாளையத்தை  சேர்ந்த உதயகுமார் (வயது 32) என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதும் குறிப்பாக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் 6 மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 8 மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மோட்டார் திருடன் உதயகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News