ஆன்மிகம்
நவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட தங்க ஸ்ரீ சக்கரம்

நவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட தங்க ஸ்ரீ சக்கரம்

Published On 2020-10-19 02:35 GMT   |   Update On 2020-10-19 02:35 GMT
நவராத்திரி திருவிழா தொடங்கியதால் ராமேசுவரம் கோவிலில் தங்க ஸ்ரீ சக்கரம் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்த ஸ்ரீ சக்கரத்திற்கு பல்வேறு பொருட்களாலும், கங்கை தீர்த்தத்தாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முதல் நாளான நேற்று காலை கோவிலின் அம்மன் சன்னதி பிரகாரத்தில் அமைத்த கொலு மண்டபத்தில் அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு, அந்த ஸ்ரீ சக்கரத்திற்கு பல்வேறு பொருட்களாலும், கங்கை தீர்த்தத்தாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெறும் இந்த 9 நாட்கள் மட்டுமே அம்பாளின் தங்க ஸ்ரீ சக்கரம் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஸ்ரீ சக்கரத்தை பக்தர்கள் சற்று தள்ளி நின்று பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். விழா நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடை பெறுகிறது.
Tags:    

Similar News