செய்திகள்
குதிரை (கோப்புபடம்)

40 ஆண்டு பழமையான டி.என்.ஏ.விலிருந்து குளோனிங் முறையில் குதிரை பிறந்தது

Published On 2020-09-16 09:01 GMT   |   Update On 2020-09-16 09:06 GMT
குதிரை இனம் அழிந்து வருவதால் அதை காப்பாற்றும் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ.வில் இருந்து குளோனிங் முறையில் குதிரையை உருவாக்கி உள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ப்ரெஸ் வால்ஸ்கியின் என்ற குதிரை இனம் குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குதிரை இனம் அழிந்து வருவதால் அதை காப்பாற்றும் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ.வில் இருந்து குளோனிங் முறையில் குதிரையை உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் சான்டியாகோ மிருக காட்சி சாலை அதிகாரிகள் கூறும்போது, மிருககாட்சி சாலையில் குளோனிங் முறையில் பிறந்த முதல் குதிரை இதுவாகும். அந்த குதிரை டெக்சாஸ் கால்நடை வளாகத்தில் குளோனிங் செய்யப்பட்டு வாடகை தாய் மூலம் கர்ப்பம் தரிக்கப்பட்டது.

அதன்பின் அந்த குதிரை வெற்றிகரமாக பிறந்தது. அதற்கு கர்ட் என்ற பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த குதிரை சாண்டியாகோ உயிரியல் பூங்காவில் இருந்து சபாரி பூங்காவுக்கு மாற்றப்பட்டு உண்மையான மந்தையின் ஒருங்கிணைக்கப்படும்.

1980-ம் ஆண்டு மிருக காட்சி சாலையில் உறைந்த நிலையில் சேகரிக்கப்பட்ட ஒருசெல்லில் இருந்து இந்த குதிரை குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டது.

கர்ட் குதிரை இப்போது ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருக்கிறது என்றனர்.

தேசிய மிருக காட்சி சாலையின் அறிக்கையின்படி ப்ரெஸ்வால்ஸ்கி குதிரை கடைசியாக அறியப்பட்ட காட்ட குதிரையாகும். முதலில் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்பட்ட இந்த குதிரை மனித வளர்ச்சி மற்றும் விரிவடைந்த வாழ்விடங்கள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News