செய்திகள்
முத்தரசன்

வெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும்- முத்தரசன்

Published On 2019-12-06 08:25 GMT   |   Update On 2019-12-06 12:08 GMT
வெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலை காய்கறி கடையில், கருவாட்டு கடையில் கூறு போடுவது போல ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற நடவடிக்கையை இந்த அரசை தவிர வேறு எந்த அரசாலும் செய்ய முடியாது. இது ஒரு ஜனநாயக சீர்குலைவு.

வெங்காய விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி மந்திரி சீதாராமன் கூறும்போது, ‘வெங்காயம் நான் சாப்பிடுவது இல்லை என்கிற ஒரு அலட்சியமான ஒரு பதிலை தெரிவித்து இருக்கிறார். அவர் வெங்காயம் சாப்பிடுகிறாரா? சாப்பிடவில்லையா? என்பது பிரச்சனை அல்ல.

 


பல வியாதிகள் இருக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையை சாப்பிட மாட்டார்கள். அது போல நிர்மலா சீதாராமனுக்கு வெங்காய வியாதிகள் இருக்கலாம்.

அதனால் அவர் சாப்பிடாமலும் இருக்கலாம். சாதாரண மக்களில் இருந்து வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உள்பட மக்களாக இருக்கிற அத்தனை பேருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் வெங்காயம் தேவை. வெங்காயம் இல்லை என்றால் உணவு சுவைக்காது.

இந்த அருமை நிர்மலா சீதாராமனுக்கு ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம். வெங்காயம் அவர்களுக்கு தேவைப்படாமலும் இருக்கலாம்.

பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் அவசரமாக வெங்காயத்தை இறக்குமதி செய்து ரே‌ஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேவையான வெங்காயத்தை வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News