செய்திகள்
கோப்புப்படம்

வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Published On 2021-06-18 01:57 GMT   |   Update On 2021-06-18 02:10 GMT
அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் பொருட்டும் போக்குவரத்து துறை தொடர்பான பணிகளுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்து இருக்கிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங்கி இருக்கிறது. இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாநிலங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளன.

இதை கருத்தில் கொண்டும், அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் பொருட்டும் போக்குவரத்து துறை தொடர்பான பணிகளுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்து இருக்கிறது.

இதில் முக்கியமாக, வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை காலாவதியாகும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி (அனைத்து வகை) உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள இந்த அமைச்சகம், இந்த உத்தரவை அனைவரும் தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News