உள்ளூர் செய்திகள்
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஏரியூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-16 07:34 GMT   |   Update On 2022-04-16 07:34 GMT
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஏரியூர், 

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாயில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் சுஞ்சல்நத்தம், பட்டக்காரன் புதூர், ஈச்சப்பாடி, டேம் கொட்டாய், பாப்பான் காடு, கூர்க்காம்பட்டி, உள்ளிட்ட 9 கிராம மக்க ளுக்கு சொந்தமானது.

இந்த கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து 6 கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து காலை ஸ்ரீ வலம்புரி விநாயகர், நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வாண வேடிக்கையுடன், மங்கல இசை முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News