ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

ஒரு வார இடைவெளிக்கு பின் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

Published On 2021-08-10 03:55 GMT   |   Update On 2021-08-10 03:55 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தில் கூட பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், அழகர்கோவில், சோலைமலை கோவில் உள்ளிட்ட 22 கோவில்களில் கடந்த 2-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தில் கூட பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதலே மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News