உள்ளூர் செய்திகள்
நித்யகல்யாணி அம்பாள் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்தபடம்.

கடையம் நித்யகல்யாணி அம்பாள் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-04-15 09:33 GMT   |   Update On 2022-04-15 09:33 GMT
கடையம் நித்யகல்யாணி அம்பாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடையம்:

கடையத்தில் பிரசித்தி பெற்ற நித்யகல்யாணி அம்பாள்- வில்வவனநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. காலையில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலையில் தீபாராதனை ஏக சிம்மாசனம் நடைபெற்றது.

மறுநாள் 8--ந்தேதி (வெள்ளிக்கிழமை)காலையில் ஏக சிம்மாசனம், அபிஷேகம், மாலையில் கற்பக விருட்சம் காமதேனு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் 9--ந்தேதி (சனிக்-கிழமை) காலையில் ஏக சிம்மாசனம், அபிஷேகம், மாலையில் பூத,சிம்ம வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது.

 இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை,மாலை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் தினந்தோறும் மாலையில் வில்வவனநாத சுவாமி முற்றோதுதல் குழுவினர் சார்பாக திருமுறை இன்னிசை நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் 13-ந்தேதி (புதன்கிழமை) காலையில் அபிஷேகம், தீபாரதனை, மாலையில் நடராஜர் சிவப்பு சாத்தி வருதல் நடைபெற்றது.

நேற்று (14-ந் தேதி) அதிகாலையில் நடராஜர் அபிஷேகம், வெள்ளிக் கேடயம் வெள்ளை சாத்தி வருதல் நடைபெற்றது.

பின்னர் மாலையில் நடராஜர் வாகனம் பச்சை சாத்தி வருதல், இரவில் அபிஷேகம், கைலாச பருவதம் கமல வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது.

 இதைத்தொடர்ந்து இன்று அதிகாலையில் அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் , பின்னர் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.

நிகழ்வில் கடையம் இன்ஸ்-பெக்டர் ரகுராஜன், யூனியன் சேர்மன் செல்லம்மாள், கவுன்சிலர் புளிகணேசன் பஞ்சாயத்து தலைவர்கள் டி.கே.பாண்டியன், அழகுதுரை, ரவிச்சந்திரன்,பூமிநாத் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒவ்வொரு நாள் பூஜையையும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News