இந்தியா
ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்

Published On 2021-12-07 06:11 GMT   |   Update On 2021-12-07 08:31 GMT
இந்தியாவில் இதுவரை 23 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 10 பேரை ஒமைக்ரான் வைரஸ் தாக்கி உள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் ஏற்பட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 35-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வகை வைரஸ் டெல்டா வைரசைவிட 10 மடங்கு வீரிய தன்மை கொண்டதால் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 23 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 10 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ராஜஸ்தான்-9, கர்நாடகம்-2, குஜராத்-1, டெல்லி-1 ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான், கேரளா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா மற்றும் மிசோரம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களில் கடந்த 10 தினங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளன.

இதன் காரணமாக இந்தியாவில் 3-வது அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். ஒமைக்ரான் வைரசால் 3-வது அலை பாதிப்பு ஏற்படுமா? என்பது சில வாரங்களில் தெரியும் என்று மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த டாக்டர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஒமைக்ரான்
கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம். 3-வது அலை வர வாய்ப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொற்று நோயியியல் நிபுணரும், சுகாதார அமைப்புகளின் நிபுணருமான டாக்டர் சந்திரகாந்த் லகாரியா இது தொடர்பாக கூறியதாவது:-

அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்களை உள்ளடக்கிய சோதனை அதிகரிப்பால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இதுவரை கிடைக்கப்பட்ட மாறுபாடு பற்றிய தகவலின் அடிப்படையில் மக்கள் பீதி அடைய தேவையில்லை.

3-வது அலைக்கு இப்போது சாத்தியமில்லை. சில மாவட்டங்களில் பரிசோதனைகள் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு உயரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒமைக்ரான்
பரவல் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார பொருளாளர் நிபுணர் ரிஜோ எம்.ஜான் கூறும்போது, ‘இந்த நேரத்தில் தேசிய அளவில் பாதிப்பு அதிகரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 3-வது அலை இதுவரை இல்லை’ என்றார்.


இதையும் படியுங்கள்...சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் நோட்டீஸ்
Tags:    

Similar News