செய்திகள்

ஐபிஎல் 2018- கொல்கத்தாவிற்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2018-05-15 16:36 GMT   |   Update On 2018-05-15 16:36 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #KKRvRR
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஷிவம் மவி வீசினார். ராகுல் திரிபாதி எதிர்கொண்டார். திரிபாதி அடித்த பந்து ஸ்லிப் திசையை நோக்கி சென்றது. ஆனால் ராணா பந்தை பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து ராணா தப்பினார்.

2-வது ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி வீசினார். இதனால் 19 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 3-வது ஓவரை ஷிவம் வீசினார். இந்த ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசினார். இதனால் ராஜஸ்தானுக்கு 28 ரன்கள் கிடைத்தது. இதனால் 3 ஓவரில் 49 ரன்கள் குவித்தது. 3.2 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்னைத் தொட்டது.

5-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ராகுல் திரிபாதி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 4.5 ஓவரில் 63 ரன்கள் குவித்திருந்தது. 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இருந்து ராஜஸ்தானுக்கு சரிவு ஏற்பட்டது. இந்த ஓவரில் ரகானே ஆட்டமிழந்தார். 10-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார்.



பட்லர் ஆட்டமிழந்ததும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. சுனில் நரைன் சுஞ்சு சாம்சனை வீழ்த்த, குல்தீப் யாதவ் பென்ஸ் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரையும் வெளியேற்றினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் தாக்குப்பிடித்து விளையாடி 26 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
Tags:    

Similar News