உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-05-04 10:34 GMT   |   Update On 2022-05-04 10:34 GMT
நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது தற்போது அது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் போதிய இடம் வசதி இல்லை எனக் கூறி நகராட்சி அலுவலகத்தை ராக்கியாபாளையம் தொகுதியின் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய  அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இடமாற்றம் செய்யப்பட்டால் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். அதோடு மட்டுமில்லாமல் அங்கு போதிய பேருந்து வசதிகளும் கிடையாது. 

எனவே நகராட்சி அலுவலகத்தின் முன்புறம் உள்ள பகுதியில் கூடுதலாக கட்டிடம் கட்டி தற்போது செயல்பட்டு வரும் இடத்திலேயே செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கையை மீறி நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய முன்னேறபாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது  நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News