செய்திகள்
ஜிகா வைரஸ்

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 28 ஆக உயர்ந்தது

Published On 2021-07-15 15:17 GMT   |   Update On 2021-07-15 15:17 GMT
ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அங்கு ‘ஜிகா’ என்ற புதிய வைரசும் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் மூலமாகவே இந்த வைரசும் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஜிகா வைரஸால் 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று மேலும் ஐந்து பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் பெண்கள். இதன்மூலம் கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரத்தின் அனயரா பகுதியின் குறிப்பிட்ட 3 கிலோ மீட்டருக்குள் ஜிகா வைரஸ் பரவுகிறது. அங்கு தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் ஏடிஸ் கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு கடிப்பதால் பெரும்பாலும் ஜிகா வைரஸ் பரவுகிறது.

இதையடுத்து வைரஸ் பரவும் பகுதியில் கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. முதற்கட்டமாக 16 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News