தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

ஆப்பிள் பயனர்கள் உடனே அப்டேட் செய்யுங்க... இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு

Published On 2022-03-19 10:24 GMT   |   Update On 2022-03-19 10:24 GMT
ஆப்பிள் சாதனங்களின் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டது.

இந்த அப்டேட்டில் புதிய சிரி வாய்ஸ்கள், முகக்கவசம் அணிந்தபடியே ஐபோன்கள், ஐபேட்களை அன்லாக் செய்யும் அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் ஆப்பிள் சாதனங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் ஆப்பிள் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் இணைய பாதுகாப்பு பிரிவான ஐ.சி.இ.ஆர்.டி அனைத்து ஆப்பிள் பயனர்களையும் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கின்றன. இதன்மூலம் ஹாக்கர்கள் ஆப்பிள் சாதனங்களுக்குள் நுழைந்து சில முக்கிய தகவல்களை எடுத்துவிட முடியும்.  இவற்றை சரி செய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டுக்கு உடனே மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 



மேலும் ஆப்பிள் சாதனங்களில் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

14.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐஓஎஸ் ஐபேட் ஓஎஸ்

8.5 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் வாட்ச் ஓஎஸ்

15.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி

12.12.13 விண்டோஸ் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐடியூன்ஸ்

12.3 மோண்டெரே வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ் 

11.6.5 பிக் சர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்

ஆப்பிள் மேக் ஓஎஸ் கேட்டலினா

7.9 சாஃப்ட்வேர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி

10.4.6 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் கேரேஜ்பேண்ட்

10.7.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் லாஜிக் ப்ரோ எக்ஸ்

13.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் Xcode

ஆப்பிள் மென்பொருள் பிரச்சனைகளை சரி செய்ய பயனர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News