தொழில்நுட்பம்
ரியல்மி ஸ்மார்ட்போன்

மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-12-30 11:41 GMT   |   Update On 2020-12-30 11:41 GMT
மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.

RMX3092 எனும் மாடல் நம்பர் கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி 8 மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10  ஒஎஸ், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 2874 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 8088 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய தரத்தை உறுதிப்படுத்தும் பிஐஎஸ் வலைதளத்திலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News